Friday, 27 May 2011

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட

வேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும்.
1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.  
தமிழ் கணினி

2. அடுத்து பைல் மெனுவில் “Save as Web Page” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். “Save As” என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக் கவும். “File name” என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.
3. இந்த “Save As” டயலாக் பாக்ஸில் “Publish” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை “Browser support” என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் “Web Options” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம். இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினை யும் வரையறை செய்திடலாம். பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்.



Thursday, 26 May 2011

விண்டோஸ் பெட்டிகள்

விண்டோஸ் இயக்கத்தில் நாம் நாள்தோறும் பல பாக்ஸ் களைப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர் பற்றி படிக்கையில், மெனு, லிஸ்ட், டெக்ஸ்ட் பாக்ஸ், ட்ராப் டவுண் மெனு எனப் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். பயன்பாட்டில் பல வேளைகளில் இவற்றை, ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். இங்கு அவற்றைத் தெளிவாகக் காணலாம்.

1.டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box): கம்ப்யூட்டர் மலர் கட்டுரைகளில், பல வேளைகளில், "இப்போது இன்னொரு பெட்டி பாப் அப் ஆகி வரும். அதில் உங்கள் தகவலை டைப் செய்திட வேண்டும்' என எழுதி இருப்போம். ஒரு சிறிய பாக்ஸ் தரப்பட்டு அதில் நீங்கள் உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடக் கேட்டுக் கொள்ளப்பட்டால், அல்லது தேவையாகத் தரப்பட்டால், அதுவே டெக்ஸ்ட் பாக்ஸ். எடுத்துக்காட்டாக, ஒரு புதிய போல்டர் ஒன்று அமைக்கிறீர்கள். அதில் New Folder என்று முதலில் மாறா நிலையில் கொடுக்கப்பட்டு, பின்னர் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படும். இந்த பாக்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் ஆகும்.
2. ட்ராப் டவுண் லிஸ்ட் (Drop Down List): பலரும் இதனை ட்ராப் டவுண் மெனு என்று எழுதுகின்றனர். இது என்ன? நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகள் பலவற்றினை உங்கள் விருப்பத் தேர்வாக, ஒரு பட்டியலில் கொடுக்கப்படும். இதுவே ட்ராப் டவுண் லிஸ்ட். இதனைத் திறக்கவும், மூடவும் செய்திடலாம். மூடி இருக்கையில், இறுதியாகத் தேர்ந்தெடுத்த விருப்பத் தேர்வினைக் (Options) காட்டும். திறக்கப் பட்ட நிலையில், அனைத்து ஆப்ஷன்களையும், நீங்கள் தேர்வு செய்வதற்காகக் காட்டும். திறப்பதற்கு, இதன் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறி மீது கிளிக் செய்திட வேண்டும். பட்டியலில் உள்ள எதனைக் கிளிக் செய்தாலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் ரத்து செய்யப்பட்டு, புதிய விருப்பம் செயல்பாட்டிற்கு வரும்.
3. லிஸ்ட் பாக்ஸ் (List Box): இதனையும் ட்ராப் டவுண் மெனு என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அல்லது ட்ராப் டவுண் லிஸ்ட் என அழைக்கின்றனர். ஏனென்றால், இந்த பெட்டியிலும் நாம் தேர்ந்தெடுக்கப் பல விருப்பங்கள் கொடுக்கப்படும். ஆனால் இது ட்ராப் டவுண் லிஸ்ட் அல்லது மெனு அல்ல. ஏனென்றால், இது திறக்கப்பட்டே இருக்கும். விருப்பத் தேர்வு செய்திட அனைத்தும் காட்டப்பட்டே இருக்கும். இவற்றைப் பெற எந்த அம்புக் குறியையும் கிளிக் செய்திட வேண்டிய தில்லை. அனைத்து விருப்பங்களையும் காண வேண்டும் எனில், அம்புக் குறியினைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, இதில் தரப்பட்டிருக்கும் ஸ்குரோல் பாரில் கிளிக் செய்து மேலும் கீழும் நகர்த்த வேண்டும். நமக்கு விருப்பமானதை இந்த ஸ்குரோல் பாரினை நகர்த்துவதன் மூலம் பெற்று, இடது கிளிக் செய்தால், இது ஹைலைட் செய்யப்படும். மாற்றாக இன்னொரு வழியும் உள்ளது. ஸ்குரோலிங் செய்திடாமல், உங்கள் விருப்பத்தினைப் பெற, மேலாக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், விருப்பத்தின் பெயரை டைப் செய்திடத் தொடங்கலாம். அந்த விருப்பம் பெட்டியில் இருந்தால், உடனடியாக அது காட்டப்படும். பின்னர் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
அருகில் உள்ள படத்தைக் காணவும். 1 எனக் காட்டப்பட்டிருப்பது டெக்ஸ்ட் பாக்ஸ். இதில் உங்கள் விருப்பமானதை டைப் செய்திடும் வசதி உள்ளதால், இது டெக்ஸ்ட் பாக்ஸ். 2 ஆவதாக, லிஸ்ட் பாக்ஸ். ஏனென்றால், இங்கு லிஸ்ட் கீழாக விரிக்கப்பட்டு, அனைத்து விருப்பங்களும் காட்டப்பட்டுள்ளன. மூன்றாவதாக உள்ளது ட்ராப் டவுண் லிஸ்ட். அம்புக் குறியில் கிளிக் செய்து, நாம் நமக்குத் தேவையானதைப் பெற்றுப் பின்னர் தேர்ந்தெடுக்கிறோம்.
4.டயலாக் பாக்ஸ் (Dialogue Box): ஒரு செயல் அல்லது பொருள் என்ன எனச் சொல்லும் பெட்டி. வழக்கமாக, ஒரு செயலை நீங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளும் பாக்ஸ். எடுத்துக்காட்டாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்திட மெனு பார் சென்று, File என்பதில் கிளிக் செய்கிறீர்கள். கீழாக விரியும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில், குச்திஞு என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்தவுடன், உங்களுக்குக் கிடைப்பது தான் டயலாக் பாக்ஸ். சில வேளைகளில், இத்தகைய டயலாக் பாக்ஸில், கேள்வி ஒன்று கேட்கப்பட்டு, உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப் படும். பதிலாக நீங்கள், அதில் தரப்பட்டுள்ள பல டேப்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. செக் பாக்ஸ் (Check Box): மேலே தரப்பட்டுள்ள அனைத்திலும் இருந்து வேறுபட்ட செயல்பாட்டினைக் கொண்டது செக் பாக்ஸ். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்களை நாம் தேர்வு செய்திடலாம். செக் பாக்ஸ் பட்டியல் ஒன்றில் பல விருப்பங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். இதற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் மவுஸால் கிளிக் செய்கையில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி, நம் விருப்பங்களைத் தேர்வு செய்திடலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விருப்பங்களும் செயல்பாட்டிற்கு வரும். மற்ற தேர்வுகள் போல, ஒன்றைத் தேர்வு செய்தவுடன் முதலில் தேர்வு செய்தது ரத்து செய்யப்பட மாட்டாது. ரத்து செய்ய வேண்டும் என எண்ணினால், மீண்டும் ஒருமுறை அதில் கிளிக் செய்திட வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பச் சொற்களை, ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினாலும், செயல்பாட்டினைத் தெரிந்து வைத்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதுதான் நமக்குத் தேவை. இருப்பினும் நாம் ஒன்றை எண்ணி, அதனை எதிர்பார்த்து ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க இந்த விளக்கங்கள் பயன்படும்.

Wednesday, 25 May 2011

இலவச மென்பொருள்களை download செய்யும் போது கவனிக்க வேண்டியவை

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழ்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகளை கொடுத்து உள்ளேன்.
  • இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
  • இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை ஆன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம். 
  • எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிருங்கள் ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள் ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
  • இலவச மென்பொருட்களை தொகுத்து வழங்கும் தளங்களான Cnet.com , brothersoft.com  மற்றும் சில தளங்களில் இருந்தே டவுன்லோட் செய்யவும்.
  • டொரன்ட் மூலம் மென்பொருளை டவுன்லோட் செய்வது முற்றிலும் தவிர்க்கவும் ஏனென்றால் இந்த முறையில் தான் நம் கணினி மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்தாலும் கூட நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின்  Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்து டவுன்லோட் செய்யவும்.
    • குறிப்பாக Cnet.com தளத்தில் டவுன்லோட் செய்யும் போது அதனுடைய Product Ranking 1 முதல் 2 வரை உள்ள மென்பொருட்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
    • எந்த தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும்போது மொத்த டவுன்லோட்  அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை டவுன்லோட் செய்தார்கள் என்று பார்த்து அதிகம் பேர் பார்த்து இருந்தால் அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது ஆகவே அந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

      • ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
      • இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம். 
      இன்றைய குரோம் நீட்சி- Chrome SEO 

      நீட்சிகள் வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள நீட்சி இந்த Chrome SEO (Search Engine Optimization). இந்த நீட்சியை பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உபயோகிக்கவும். என்றால் இந்த நீட்சியின் மூலம் தேடியந்திரங்கள் மூலம் நம் பிளாக்கிற்கு எத்தனை பேர் வந்துள்ளனர். மற்றும் நம் தளத்திற்கு மற்ற தளங்களில் இருந்து கிடைக்கப்பட்டுள்ள Backlinks எவ்வளவு மற்றும் traffic rank, Search Stats, Bookmarks, cached, On site, Domain Details போன்ற வசதிகளை இதில் அறிந்து கொள்ளலாம்.  

    Saturday, 21 May 2011

    உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?

    பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன. 

    இப்படி கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காமல் கவலை படுகிறீர்களா தங்களுக்காக ஒரு சிறந்த விளம்பர தளத்தை அறிமுக படுத்தி வைக்கிறேன்.
    1. இதில் கூகுள் அட்சென்ஸ் போன்று நிறைய கோட்பாடுகள் இல்லை குறிப்பாக மொழியை வைத்து எந்த தளத்தையும் நிராகரிப்பதில்லை.
    2. குறைந்தது 10$ வருவாய் வந்தவுடன் நமது வங்கி கணக்கில் BANK TRANSFER செய்து விடுவார்கள்.
    3. 90% கோரிக்கைகளை நிராகரிப்பதில்லை அனைத்தையும் ஏற்று கொள்கிறார்கள்.
    4. APPROVED செய்த அடுத்த வினாடியே நாம் விளம்பரங்களை நம் தளத்தில் போட்டு கொள்ளலாம்.
    5. குறிப்பாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
    இணையும் முறை :
    • இந்த தளத்தின் விளம்பரங்கள் உங்களுக்கு கிடைக்க கீழே உள்ள பேனர்(படத்தின் மீது) க்ளிக் செய்யுங்கள்.(இந்த பேனர் மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).
    • இதில் கிள்க் செய்யவும்
    •  
    • பின்பு register பொத்தானை அழுத்தி இத்தளத்தில் சேரலாம்.